Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் மாணவிக்கு…. தாலி கட்டிய +2 மாணவன்…. கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்….!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் குடிப்பது, பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது, குடுமிபிடி சண்டை போன்ற ஒழுங்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க அறியாத வயதில் காதல் என்று சொல்லிக்கொண்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றுவது, சீருடையில் தாலி கட்டுவது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.

அந்தவகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் 12-ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த போது, மாணவிக்கு மாணவன் தாலி கட்டியுள்ளார். இதனை உடன் இருந்த மாணவன் வீடியோ எடுத்துக் கொண்டே, கட்டுயா.. கட்டுயா.. என்று கூறுகிறார்.

அவர்களுக்கு இருவர் பேப்பரை கிழித்து பூவிற்கு பதிலாக வீசுகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |