Categories
உலக செய்திகள்

“மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்”… மூவர்ண கொடியின் வண்ணத்தில் உற்சாக வரவேற்பு…!!!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் முதல் முறையாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அதனை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அந்த நாட்டின் கேன்பெர்ராவுக்கு அவர் இன்று சென்றடைந்திருக்கின்றார். இந்த நிலையில் அவருக்கு இந்தியாவின் மூவர்ண கொடியின் வண்ணம் வெளிப்படும் விதமாக நாடாளுமன்ற இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது மூவர்ண வரவேற்புடன் கேம்பெற வந்தடைந்து இருக்கின்றேன். ஆஸ்திரேலியாவின் பழமையான நாடாளுமன்ற இல்லம் நம்முடைய தேசிய வண்ணத்தில் காண்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் கேன் பெர்ரா மற்றும் சிட்னி போன்ற நகரங்களுக்கு அவர் செல்கின்றார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடபாண்டில் முதன் முறையாக மெல்போன் நகரில் நடைபெற்ற குவாட் வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலான கூட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த நாட்டிற்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது சுற்றுப்பயணம் ஆகும். இது இந்த சுற்று பயணத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சக வெளியுறவுத்துறை மந்திரியான பென்னி வாங்கை சந்தித்து 13 வது வெளியிடவும் மந்திரிகள் கூட்டமைப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபடுகின்றார் இதேபோல் அந்த நாட்டு துணை பிரதமர் மற்றும் ராணுவ மந்திரியான ரிச்சர்ட் மார்லெஸ்ஸையும் சந்தித்து பேசுகின்றார்.

Categories

Tech |