வட அமெரிக்க நாடான மெக்ஸிகோ உலக அளவில் போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தி வரும் நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. நாடு முழுவதும் போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்த சூழலில் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு மர்மமான முறையில் விஷம் கொடுக்கப்பட்டதும் அதன் பின்னணியில் போதை பொருள் கடத்தல் கும்பல் இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோவின் தென் மாகாண சியாபாசில் உள்ள கிராமப்புற மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மாணவர்கள் பல திடீரென வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இது பற்றிய தகவல் அறிந்த பெற்றோர்கள் அலறி அடித்தபடி பள்ளிக்கு விரைந்தனர் அதன் பின் பள்ளி ஊழியர்களும் பெற்றோரும் இணைந்து திடீர் உடல்நலகுறைவிற்கு ஆளான 57 மாணவர்களை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.
இதனை கேட்ட பெற்றோர்கள் பள்ளியின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இடையே மருந்து பரிசோதனையில் மாணவர்களின் உடலில் கொக்கைன் எனப்படும் போதைப் பொருள் கலந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் சியாபஸ் மாகாணத்தில் உள்ள வேறு இரண்டு பள்ளிகளில் இதே போல் மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களுக்கும் போதைப் பொருள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் இந்த மூன்று சம்பவங்களின் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் பங்கு இருக்கலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது. அதே சமயம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் சிலர் பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட அசுத்தமான குடிநீர் அல்லது உணவு நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றன இருப்பினும் விசாரணைக்கு பின்னே உண்மை தெரியவரும் என சியாபஸ் மாகாண போலீசார் இது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.