அமுல் மற்றும் பல கூட்டுறவு சங்கங்கள் இணைக்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்திற்கு 3 நாள் பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வந்துள்ளார். இதனையடுத்த அவர் வடகிழக்கு கவுன்சிலின் 70-வது மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இயற்கை விவசாயம் மற்றும் டிஜிட்டல் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்நிலையில் அமுல் உள்ளிட்ட பல கூட்டுறவு சங்கங்களை இணைத்து பல மாநிலங்களில் கூட்டுறவு சங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயற்கை பொருட்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் சான்றிதழ் பெற்ற பின்னர் தயாரிப்புகளின் ஏற்றுமதி பல மாநில கூட்டுறவு சங்கங்கள் உறுதி செய்யும். இதனால் நேரடியான லாபம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செல்லும் என கூறியுள்ளார்.
ஆனால் வடகிழக்கு கூட்டுறவு பால் பண்ணை மாநாட்டில் கலந்து கொண்ட அவர் அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்க வேண்டும். இது உள்நாட்டு சந்தையில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் உள்ள பால் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். அதிலும் பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு பால்வினியோகம் செய்ய பெரிய வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. எனவே இதனை பயன்படுத்திக் கொண்டு உலக சந்தையை ஆராய, அரசு பல மாநில கூட்டுறவு சங்கங்களை நிறுவுகிறது. இது ஏற்றுமதி நிறுவனமாக செயல்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.