Categories
மாநில செய்திகள்

இனி பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் மழை பெய்தால் பள்ளியின் தலைமை ஆசிரியரே விடுமுறை அறிவிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அந்தந்த பகுதிகளில் மழை பெய்யும் அளவைப் பொறுத்து கல்வி அலுவலர்களிடம் தெரிவித்துவிட்டு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியரே விடுமுறை அளிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பிறகு இன்று 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒன்னு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற அக்டோபர் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |