இன்ஃபோசிஸ் நிறுவனம் பாரபட்சமாக பணிக்கு ஆட்களை சேர்ப்பதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுத்துள்ளது.
இன்போசிஸ் என்னும் பிரபல ஐடி நிறுவனத்தினுடைய ஆட்கள் சேர்க்கும் பிரிவில் துணை தலைவராக இருந்த ஜில் ப்ரீஜீன் அந்நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்திருக்கிறார். அதாவது பாலினம், தேசியம் மற்றும் வயது போன்ற அடிப்படையில் இன்போசிஸ் நிறுவனம் பாரபட்சமாக நடத்துவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது பற்றி அவர் தெரிவித்ததாவது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருக்கும் சட்டவிரோதமான பாகுபாடான கலாச்சாரத்தை பார்த்து நான் அதிர்ந்தேன். அதாவது இந்திய வம்சாவளியினர், குழந்தை பெற்ற தாய்மார்கள், ஐம்பது வயதுக்கு அதிகமானோரின் விண்ணப்பங்களை தவிர்க்க வேண்டும் என்று நிறுவனம் கேட்டுக் கொண்டது.
கடந்த 2018 ஆம் வருடத்தில் நான் பணியில் சேர்ந்த, முதல் இரு மாதங்களிலேயே அதனை மாற்ற நினைத்தேன். ஆனால், அப்போது நிறுவனத்தின் நிர்வாகிகளாக இருந்த டான் ஆல்பிரைட், ஜெர்ரி கர்ட்ஸ் ஆகிய இருவரும் என்னை எதிர்த்தார்கள் என்று கூறியிருக்கிறார். தற்போது, அந்நிறுவனம் இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது.
மேலும், ஜில் ப்ரீஜீன் நிறுவனத்தின் கோரிக்கைகளை ஏற்காததால் அவரை பணி நீக்கம் செய்து விட்டனர். இது மட்டுமல்லாமல் அவர் தங்கள் நிறுவனத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை. எனவே வழக்கை தள்ளுபடி செய்யுமாறு மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவை, தள்ளுபடி செய்வதை நிராகரித்த, நீதிமன்றம் இன்னும் 21 தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.