Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மீண்டும் வந்த பாகுபலி யானை” இரவு நேரத்தில் சாலையில் உலா…. பீதியில் பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிமலை அடிவார பகுதியில் சமயபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் இரவு நேரத்தில் நுழைகிறது. நேற்று முன்தினம் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதி வழியாக கல்லார் வனப்பகுதிக்கு சென்று, தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை நாசப்படுத்தியது.

மேலும் இரவு நேரத்தில் பாகுபலி யானை சமயபுரம் பகுதியில் அங்கும் இங்கும் உலா வந்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

Categories

Tech |