தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் இன்று ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை மற்றும் கரூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும். சென்னையில் நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.