தமிழக அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை கடந்து 2015 ஆம் ஆண்டு மேற்கொண்டது. வேலைவாய்ப்பு அலுவலகம் பதிவு அடிப்படையிலும், நேரடியாகவும் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும், நேரடியாகவும் பங்கேற்ற திருப்பூரை சேர்ந்த இளங்கோ என்பவர் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்தார். தேர்வில் 115 மதிப்பெண் பெற்ற போதும் எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் மற்றும் கலப்பு மணம் புரிந்து கொண்டதற்கான சான்றுகளை சமர்ப்பிக்கவில்லை என்று கூறி பணி நியமனத்துக்கு அவர் பெயர் பரிசலீக்கப்படவில்லை.
அதன் பிறகு அந்த சான்றிதழை சமர்ப்பித்த அவர், ஆய்வக உதவியாளர் பணி நிறுவனம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சான்றிதழ்களை தாமதமாக சமர்ப்பித்தார் என்பதற்காக வேலைவாய்ப்பு வழங்க மறுக்க முடியாது என்றும் மனுதாரரை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதால் மனுதாரர் ஆய்வக உதவியாளராக நியமித்து நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.