தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஓருவராக நயன்தாரா வலம் வருகிறார். கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்று அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர் மேலும் படப்பிடிப்புகளும் பிஸியாக இருந்தனர். இந்த நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக நேற்று விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் நயன்தாராவும் நானும் அம்மா அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிர்வாதங்கள் நல்ல செயல்கள் போன்றவை எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட இரட்டை குழந்தை பிறந்து இருக்கிறது. மேலும் உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டி என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதேசமயம் நான்கே மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பமடைய செய்தது இருந்தும் ரசிகர்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுள்ளனர் என பதிவிட்டு வருகின்றார்கள்.
இந்த சூழலில் சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மாசுபிரமணியன் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் பற்றி பேசி உள்ளார். அதில் வாடகத்தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் திருமணம் ஆகி 5 வருடங்கள் கழித்து தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என கூறியுள்ளார். மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி விளக்கத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.