கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் லோக் மானிய திலக் வரை இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 10:25 மணிக்கு ஈரோடு முதலாவது நடைமேடைக்கு இந்த ரயில் வந்து சேர்ந்தது. சிறிது நேரத்தில் ரயில் புறப்பட தயாராக இருந்த போது வாலிபர் ஒருவர் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பந்தப்பட்ட முன்பதிவு பெட்டிக்கு சென்ற விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் தன்னுடன் வந்த உறவினர் இறங்கிய ரயிலில் மீண்டும் ஏறவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதாக அந்த வாலிபர் கூறியுள்ளார். பின்னர் போலீசார் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். சுமார் 5 நிமிடத்திற்கு பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.