Categories
தேசிய செய்திகள்

BREAKING : வன்முறை , துப்பாக்கிசூடு – டெல்லி விரையும் மோடி , அமித்ஷா …!!

டெல்லி வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் மோடியும் , உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டெல்லி விரைகின்றனர். 

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது.

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில் அவரின் மனைவி டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கு செல்ல இருக்கின்றார். இந்நிலையில் இந்த வன்முறை சம்பவம் அரங்கேறுள்ளதால் அதை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இதனால் தலைநகர் டெல்லியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

இதனிடையே டெல்லியில் நடந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கின்றது. வன்முறையை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. வன்முறையை கட்டுப்படுத்த உள்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொள்கின்றேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். இதை தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் நிகழ்ச்சியில் இருந்த பிரதமர் மோடியும் , உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டெல்லிக்கு விரைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |