செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது “திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா போன்றோரின் இரட்டை ஆண் குழந்தை பற்றிய நேற்றைய அறிவிப்பு குறித்து மருத்துவ ஊரக பணிகள் இயக்குநரகம் தரப்பில் விளக்கம் கேட்கப்படும்.
கரு முட்டை விவகாரம் குறித்து தற்போது தான் ஒரு வழிகாட்டுதல்கள் முறையாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த தம்பதியினர் கருமுட்டை செலுத்தி பெற்றார்களா எனவும் தெரியவில்லை. இதனால் விதிமுறைகளை மீறினார்களா என்று அதிகாரிகள் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளோம்” என்று கூறினார்.