மத்திய கலாசாரத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலா உத்சவ்’ என்ற பெயரில் கலை, பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகளை நடத்தி மாநில அளவில் தேர்ச்சி பெறுவோரை ஒடிசாவில் நடக்கும் தேசிய அளவிலான இறுதிப் போட்டிக்கு அனுப்பும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனராக சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக 10 வகை போட்டிகள் நடத்தப்பட வேண்டும். முதலில் மாவட்ட அளவிலும் பின்பு மாநில அளவிலும் போட்டிகளை நடத்த வேண்டும். வாய்ப்பாடு இசை, பாரம்பரிய நாட்டுப்புற வாய்ப்பாடு இசை, தாள வாத்தியம், மெல்லிசை, செவ்வியல் நடனம், பாரம்பரிய நாட்டுப்புறம் நடனம், காட்சிகலை இரு பரிமாணம் மற்றும் முப்பரிமாணம், உள்ளூர் தொன்மை, பொம்மைகள், விளையாட்டுகள் மற்றும் நாடகம் தனிநபர் நடிப்பு போட்டிகள் நடத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.