மின்னல்தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் நேற்று நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் மைதானத்தில் நின்ற அனைவரும் பாதுகாப்பான இடங்களை தேடி ஓடி உள்ளனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 21 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.