சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக ஆப்கானிஸ்தானில் தாலிபானங்களின் எழுச்சி காரணமாக இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள தமிழகத்திற்கும் இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருந்தாலும் கூட தீவிரவாத தாக்குதல் போன்ற சமயங்களில் அதனை எதிர்கொள்ள ஒரு சிறப்பு அமைப்பு தேவை. எனவே மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் தீவிரவாத தடுப்பு பிரிவை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரிடம் நீதிபதிகள், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராக உள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் இல்லை என்றும் அளவில் கூறியுள்ள நிலையில், பயங்கரவாத தடுப்பு படை அமைக்க கோரி வழக்கு தொடர்ந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது மனுதாரர், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களில் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை பயங்கரவாத தடுப்புக்கு என பிரத்தியோகம் சிறப்பு படை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதன் பிறகு தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இலங்கையில் இருந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது மத்திய அரசு சம்பந்தப்பட்டது. மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கு தமிழக காவல்துறையில் ஏற்கனவே மூன்று பிரிவுகள் உள்ளது. எனவே புதிதாக பிரிவு ஏதும் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து இலங்கை, தேவலாய குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசும், காவல்துறையும் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.