Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்களின்… “விரிவான குடியேற்ற சட்டம் அவசியம்”… முதல் மந்திரி பேச்சு…!!!!

கேரள முதல் மந்திரியான பினராயி விஜயன் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றுள்ளார். லண்டன் லோகா கேரளா சபாவின் ஐரோப்பா இங்கிலாந்து மண்டல மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பாக முதல் மந்திரி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களின் பணி பாதுகாப்பு மற்றும் நலனுக்காக விரிவான குடியேற்ற சட்டம் அவசியம். கேரள மக்கள் அனைவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்புவது அரசின் கொள்கை இல்லை.

அதற்கு மாறாக இங்குள்ள வளர்ச்சியின் மூலமாக புதிய கேரளாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மேலும் மாநிலத்தில் கல்வி துறையை மேலும் வலுப்படுத்துவதும் கேரளாவை உயர்கல்வியின் மையமாக மாற்றுவதும் தனது அரசின் நோக்கமாக விளங்குகிறது. இந்த நிலையில் கேரளாவின் தொழில்துறையில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் யோசனைகள் மற்றும் ஆதரவை வழங்க வேண்டும்.

பாதுகாப்பான வெளிப்படையான மற்றும் சட்டபூர்வமான வழிகள் மூலமாக மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் போன்ற சுகாதார பணியாளர்களின் சமூகமான இடப்பெயர்வை செயல்படுத்துவதே இதன் நோக்கமாக விளங்குகிறது. கேரளா இங்கிலாந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக சுகாதாரத் துறையில் 3000 மேற்பட்ட காலி பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான பணிகள் முடிந்தவுடன் வருகிற நவம்பர் மாதத்தில் ஒரு வார கால வேலை வாய்ப்பு விழாவை நடத்த திட்டமிட்டு இருக்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |