வாடகைத்தாய் முறை மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டுள்ளார் நயன்தாரா.
தமிழ் சினிமா உலகில் பிரபலங்களாக வலம் வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்றிருக்கின்றார்கள். இவர்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். இவ்வாறு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது புதிதான ஒன்று கிடையாது. ஏற்கனவே நடிகைகள் பலரும் இதுபோல வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த வகையில் தற்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள். இச்சம்பவத்திற்கு பிறகு பலரும் வாடகை தாய் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றார்கள். நயன் மற்றும் விக்கி, திருமணத்திற்கு முன்பாகவே இதற்கு திட்டமிட்டு கருமுட்டை, உயிரணு உள்ளிட்டவற்றை சென்னையில் இருக்கும் பிரபலமான மருத்துவர்கள் மூலம் வாடகை தாய்க்கு செலுத்தி இருக்கின்றார்கள். இந்த நிலக்கில் இரட்டை குழந்தைகளாக பிறந்து இருக்கின்றது.
இருப்பினும் குழந்தைகள் எட்டு மாதத்தில் பிறந்திருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆகையால் மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் வைக்கப்பட்டிருக்கின்றார்கள். சட்ட ரீதியாக வாடகை தாயாக இருந்தவர்களின் தகவல்களை வெளியே கூறக்கூடாது என சொல்லப்படுகின்றது. இத்தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார்கள். இந்த நிகழ்வால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை பற்றிய விவரங்கள் சமூக வலைதளத்தில் அதிகமாக தேடப்படுகின்றது. உடல் நலப் பிரச்சினைகளால் கர்ப்பமாக முடியாத பெண்கள் வயிற்றில் குழந்தையை சுமக்க முடியாத அல்லது விரும்பாத பெண்கள் மற்றொரு பெண் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வது தான் வாடகைத்தாய் முறையாகும்.
வாடகை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்ணின் கருமுட்டையில் அவரின் கணவரின் உயிரணு செலுத்தப்பட்டு பின்னர் அந்த கருவை வாடகை தாயின் கர்ப்பப்பையில் மருத்துவர் பொருத்துவார். இதன்பின் அந்த குழந்தையை வாடகைத்தாய் பெற்றெடுப்பார். இதன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதால் வாடகை தாய்க்கும் குழந்தைக்கு எந்தவித தொடர்பும் இருக்காது.0- இந்த வாடகை தாய் முறையை திரை பிரபலங்கள் சிலரும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் நயன்தாரா தற்போது சென்னையில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி குழந்தைகளின் அருகிலேயே இருந்த வருகின்றார் குறிப்பிடத்தக்கது.