நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளதாக அறிவித் துள்ளார்கள். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன பிறகு வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில் இவர்கள் திருமணமாகி நான்கு மாதங்களில் குழந்தை பெற்றுள்ளது பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேச சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன் விக்கி தம்பதியினரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள இயலும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த தம்பதிகளின் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.