எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் மைத்ரேய்ன். இவர் கடந்து சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யாராக இருந்தாலும் சரி கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடு என அனைத்திற்கும் முரணாக செயல்படுபவர்களால் கட்சியின் ஒழுங்குமுறை குலையும், இதனால் கட்சிக்கு களங்கம் மற்றும் அவப்பெயர் உண்டாகும்.
ஆனால் இத்தகைய செயலை தான் தற்போது மைத்ரேயன் செய்துள்ளார். இதனால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.