தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு பரிசுகளை பெற்று தரும் வடகிழக்கு பருவமழை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் நமது தமிழ்நாடு முழுவதும் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம் தீட்டுதல், கவிதை, மீம்ஸ், படம் வரைதல் போன்றவற்றை உருவாக்கி வருகின்ற 20-ஆம் தேதிக்குள் instateeoct @gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இந்த போட்டியில் நமது தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். இதில் வெற்றி பெறும் முதல் 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.