ரஜினியின் வீடியோ ஒன்றை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றார்கள்.
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றார்கள். தலைவரின் தக் லைஃப் எனக் கூறி, கோர்த்து விடுவது ஒரு கலை என்றால் அதற்கு தலைவர் எங்கள் தலைவர் தான் என்கின்றார்கள் ரஜினி ரசிகர்கள்.
அந்த வீடியோவில் ரஜினி கூறியுள்ளதாவது, சிஎம் சொல்லிக்கூட அவர் பேச்சை கேட்காத ஆள் என்றால் அது சோ தான். ரஜினி சொன்னதை கேட்டு சோ கொடுத்த ரியாக்ஷன பாருங்களேன் என ரசிகர்கள் கூறுகின்றார்கள். இந்த நிலையில் மணிரத்னத்தின் தக் லைஃப் வீடியோ வெளியான நிலையில் இது தற்போது வலம் வந்து கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.
If koorthu vidurathu is an art then #Thalaivar … pic.twitter.com/VAEzmjmo5q
— Rajasekar (@prsekar05) October 8, 2022