ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டின் நிரந்தர பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது, க்ரீமியாவுடன் ரஷ்யாவை இணைக்கும் பாலத்தின் மீது தாக்குதல் நடத்தி இருப்பது தீவிரவாதம் என புதின் பேசினார். மேலும் தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்யாவின் பதிலடி கடுமையாக இருக்கும், யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றும் புதின் எச்சரித்துள்ளார். ஒரே நாளில் 84 ஏவுகணைகளை வீசி உக்ரைனை நிலைகுலைய செய்த நிலையில், அதிபர் புதின் பேசியுள்ளார்.
Categories