தீபாவளி பண்டிகையொட்டி ஜவுளிகள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தார்கள்.
வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் ஆடைகளை வாங்கி வருகின்றார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் ஈரோடு கடைவீதிகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டார்கள். தற்பொழுது தீபாவளி பண்டிகையொட்டி கடைகள் களைகட்ட ஆரம்பமாகியுள்ளது.
மேலும் ஈரோடு மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, ஆர்.கே.வி.ரோடு, நேதாஜி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் பொது மக்களின் கூட்டம் அலைமோதியன. பண்டிகை காலம் என்பதால் ஜவுளிக்கடைகாரர்கள் உற்சாகமடைந்து தங்களது கடையில் வந்து ஆடை எடுக்கும்படி அழைத்த வண்ணம் காணப்பட்டார்கள். இதனால் மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்குள்ளானது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அங்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டார்கள்.