திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி பொங்கலூர் பக்கத்தில் உள்ள தேவனம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் விவசாயம் செய்வதே பிரதான தொழிலாக உள்ளது. இருப்பினும் இளைஞர்கள் பல்வேறு பகுதிகளில் வேலைக்காக சென்று வருகின்றனர். பொங்கலுரில் பிஎஸ்என்எல் உட்பட பல்வேறு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தேவனபாளையம் கிராமம் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் இந்த கிராமத்தில் எந்த செல்போன் சிக்கனமும் கிடைப்பதில்லை.
கடந்த மூன்று வருடங்களாகவே எந்த ஒரு சிம்கார்டு உபயோகப்படுத்தினாலும் சரியாக டவர் கிடைக்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். சமூக வலைதளங்களை கூட தங்களால் பயன்படுத்த முடியவில்லை என்று கூறுகின்றனர். மேலும் வீட்டிற்குள் இருக்கும் போது எந்த ஒரு அழைப்பும் வருவவதில்லை எனவும் அதேபோல் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். தேவனம்பாளையத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தள்ளி பொங்கலூர் வந்தால் மட்டுமே செல்போனை பயன்படுத்த முடியும்.
மருத்துவ உதவிக்கு கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியாது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகள், தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப் பிறகும் தங்களுடைய கிராமப் பகுதிக்கு 2g சேவை கூட கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.