Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்.. “மீண்டும் விருதுகளை குவித்த சூரரை போற்று”…. இது வேற லெவல் நியூஸ்….!!!!!

சூரரை போற்று திரைப்படம் மேலும் எட்டு விருதுகளை குவித்திருக்கின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் சூரரை போற்று. இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டடு விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.

இத்திரைப்படமானது சர்வதேச திரைப்பட விழாவில் 5 விருதுகளை தட்டி சென்றது. இந்த நிலையில் 67வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவில் சூரரை போற்று எட்டு விருதுகளை குவித்து இருக்கின்றது. சிறந்த இயக்குனருக்கான விருது சுதா கொங்கராவுக்கும், சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த இசை ஆல்பத்திற்கான விருது ஜிவி பிரகாசுக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது ஊர்வசிக்கும், சிறந்த பின்னணி பாடகர் விருது கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸுக்கும் சிறந்த பின்னணி பாடகி விருது தீ-க்கும், சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது நிகோத் பொம்மிக்கும் கிடைத்துள்ளது.

Categories

Tech |