சனாதன சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும், அவர்களின் சதி திட்டங்களை, மக்கள் விரோத திட்டங்களை முறியடித்தாக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக, சிபிஐ (எம்), சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கடந்த 2ம் தேதி மனித சங்கிலி பேரணி நடத்த திட்டமிட்டன. இதனிடையே, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை காரணமாக ஆர்எஸ்எஸ் மற்றும் மனித சங்கிலி பேரணிக்கு அனுமதியளிக்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது.
தொடர்ந்து, காவல்துறையிடம் விளக்கம் கேட்டதன் பேரில், அக். 11-ம்தேதிஇன்று மனித சங்கிலி பேரணி நடைபெறும் என விசிக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டாக இணைந்து அறிவித்தன.. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்று பேரணி நடைபெறுகிறது.