Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன….? லெஜண்ட் சரவணன் இப்படியா…. அவரை சுற்றி எப்போதும் 10 பவுன்சர்களா…. பிக்பாஸ் பிரபலம் சொன்ன தகவல்….!!!!

லெஜண்ட் சரவணன் பற்றி அமுதவாணன் பிக் பாஸ் 6 – ல் பேசியுள்ளார். 

தமிழ் திரையுலகில் “தி லெஜண்ட்” படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி இருக்கின்றார் லெஜண்ட் சரவணன். இவர் பிரபல தொழிலதிபர் ஆவார். அவரது கடை விளம்பரங்களில் நடித்து பிரபலமாகி அதன் பின் ஹீரோவாக இந்த படம் நடித்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்பதால் நஷ்டத்தை சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் 6 சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கும் “விஜய் டிவி” காமெடியன் “லெஜண்ட்” படத்தில் நடித்தது குறித்து  கூறியதாவது, “அந்த படத்தின் 2 காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். லெஜெண்டை சுற்றி எப்போதும் 10 பவுன்சர்கள் இருப்பார்கள்.

அதனால் பார்ப்பது மிக கடினம். ஷூட்டிங்கில் விவேக் சார் தான் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். காமெடியோடு நடனமும் ஆடுவேன் என விவேக் அவரிடம் சொல்ல, நடனம் கற்றுக்கொண்டீர்களா என லெஜண்ட் கேட்டார். மேலும் அவர் என்ன வேண்டுமானாலும் சாப்பிடுவார், ஆனால் எப்போதும் டயட் இருப்பார். எடையையும் அதிகம் குறைத்திருக்கின்றார். இந்த வயதிலும் அதிகம் உழைப்பார். ஏசியில் இருப்பவர் ஷூட்டிங்கிற்காக வெயிலில் வந்து நீண்ட நேரம் நின்றார். இதனை அடுத்து இரவில்  11 மணிக்கு தான் தூங்குவார், 4 மணிக்கு எல்லாம் எழுந்துவிடுவார். அப்படிப்பட்டவர் தான் லெஜண்ட்” என்று அமுதவாணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |