எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவிற்காக மைத்ரேயன் இதுவரை எந்த ஒரு செயலையும் செய்தது கிடையாது. அவரால் எந்த பலனும் எங்களுக்கு இல்லை. அதே வேளையில் பாதிப்பும் இல்லை.
இதனை பொருட்படுத்த வேண்டாம். முதல்வர் முக ஸ்டாலின் மனம் வெதும்பி பேசுகிறார். தன்னுடைய நிர்வாக திறன் குறைபாட்டை கூறுகிறாரா? கட்சியின் நிர்வாகிகளை குறிப்பிடுகிறாரா? என்று தெரியாத அளவிற்கு பயத்தோடு பேசுகிறார். திமுகவை எதிர்ப்பது மட்டுமே அதிமுகவின் கொள்கை என்று பேசியுள்ளார்.