Categories
சினிமா தமிழ் சினிமா

செம! மாஸ்…. மலையாள சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் சினேகா…. புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகாஸ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சினேகா திருமணத்திற்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தற்போது மலையாள சினிமாவில் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதாவது மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து கிறிஸ்டோபர் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக சினேகா மம்மூட்டியுடன் இணைந்து தி கிரேட் பாதர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது சினேகா மீண்டும் மம்மூட்டியுடன் இணைகிறார். இந்த படம் குறித்து நடிகை சினேகா சில கருத்துக்களை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, நான் தற்போது எனக்கு மிகவும் பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். ஒரு நல்ல கதையின் மூலம் மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க வேண்டும் என காத்துக் கொண்டிருந்தேன். அந்த வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. இயக்குனர் உன்னிகிருஷ்ணன் என்னிடம் கதையை சொன்ன உடனே என்னால் மறுக்க முடியவில்லை. என்ன கதாபாத்திரம் என்பதை தற்போது சொல்ல முடியாது. இரண்டு விதமான காலகட்டங்களில் இரு வெவ்வேறு தோற்றங்களில் வருகிறேன். மம்மூட்டியுடன் மீண்டும் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் மம்மூட்டியிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |