தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சிவா மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நட்ராஜ் என்பவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் சிவா நடிக்க இருக்கிறாராம். மேலும் ஒரு குக் கிராமத்தில் பிறந்து ஐபிஎல் தொடர்களில் விளையாடி தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் நட்ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிவா நடிக்க இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.