தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் குடிப்பது, பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது, குடுமிபிடி சண்டை போன்ற ஒழுங்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க அறியாத வயதில் காதல் என்று சொல்லிக்கொண்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றுவது, சீருடையில் தாலி கட்டுவது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.
அந்தவகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் 12-ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மாணவன் தாலி கட்டிய விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பேருந்து நிறுத்தத்தில் 12-ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய வீடியோவை வைரலாக்கிய சிதம்பரம் பகுதியை சேர்ந்த பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் மாணவிக்கு சமூகநலத்துறை கவுன்சிலிங் கொடுத்த நிலையில், மாணவனை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.