சிகரெட் மற்றும் புகையிலை பொருள்களை பயன்படுத்துவோரின் வயது 18ல் இருந்து 21ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் மட்டுமே புகையிலை மற்றும் சிகெரெட் பொருள்களை பயன்படுத்துவதற்கு சட்ட ரீதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவே நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்களில் சிலர் யாருக்கும் தெரியாமல் சிகரெட் பிடிப்பதை நாம் பார்த்திருப்போம். சிலர் தெரிந்தே சிகரெட் பிடிப்பார்கள். சட்ட ரீதியில் தப்பு என்றாலும் தெரியாமல் இது அரேங்கேறி கொண்டு தான் இருக்கிறது.
சிகரெட் பிடிப்பவர்களுக்கு கேன்சர், கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என பல்வேறு விழிப்புணர்வு செய்தாலும் சிகரெட் புகைக்கும் பழக்கம் வேதனையாக தான் இருக்கிறது. சிலர் பொது இடங்களில் சிகெரெட் பிடிக்கின்றனர். அபராதம் விதிக்கப்பட்டாலும் தெரியாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாகவும், விரைவில் இது தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார்.