தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர்ஜ இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியே பெற்று உள்ளது. இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் அதிகமான விஎப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிஜமான லொகேஷன்களில் படமாக்கப்பட்டது.
இந்த படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்துள்ளது. இந்நிலையில் மாபெரும் வெற்றி அடைந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.395 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பல நூறு கோடியை கடந்து வசூல் வேட்டை செய்து வரும் பொன்னியின் செல்வன் கண்டிப்பாக ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.