விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த 20 நபர்களில் ஒருவரான மணிகண்டன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், என்னுடைய சகோதரர் மணிகண்டன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது.
அவரை எப்போதுமே நான் புஜ்ஜி என்றுதான் அழைப்பேன். எனது தந்தையின் மறு உருவமான என் சகோதரரை நீண்டநாட்கள் நான் பிரிந்து இருக்கப் போகிறேன். அவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறவேண்டும் என நான் வாழ்த்துகிறேன். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள என் சகோதரர் மணிகண்டனுக்கு வாய்ப்பளித்த விஜய் டிவிக்கு நன்றி. என் சகோதரர் மணிகண்டனுக்கு ஆதரவு தெரிவியுங்கள் என அவர் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.