Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற லாரி….. CONTROL இழந்து மோதிய BIKE…… போலீஸ் SI மரணம்….. தூத்துக்குடி அருகே சோகம்…..!!

தூத்துக்குடி அருகே விபத்தில் போலீஸ் SI உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட மாசார்பட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் நேற்றைய தினம் இரவு மேலக்கரந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மாசார்பட்டி பகுதிக்கு உட்பட்ட அச்சம்குளம் கிராமத்தில் தவறு நடப்பதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலையில் மேலக்கரந்தை பகுதியை அடுத்து  லாரி ஒன்று பழுதாகி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது. இதனை கவனிக்காத அவர் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

இதில் சிவ சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்க தகவலறிந்து வந்த அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |