Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி சாவில் மர்மம்…. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருமலை அகரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலாஜிக்கும், வினோதினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த வினோதினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பாலாஜி தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக வினோதினியின் தந்தை வரதராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வினோதியின் சாவுக்கு காரணமான பாலாஜி, அவரது தந்தை பரமசிவம், தாய் லட்சுமி ஆகியோரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி வினோதினியின் உறவினர்கள் தமிழ் தேசிய பேரியக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக மாத சங்கத்தினருடன் இணைந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இளம்பெண்ணின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என விருதாச்சலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு உறுதியளித்த பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |