Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தாய் அடித்ததால் காயமடைந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!!

தாய் அடித்ததால் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை செங்குளம் காலனியில் சரவணக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தஞ்சை மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பானுப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஓவியா(10) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பானுப்பிரியா கடந்த இரண்டு ஆண்டுகளாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 6-ஆம் தேதி தனது மகளுக்கு பானுப்பிரியா சாப்பாடு கொடுத்துள்ளார். அப்போது பானுப்பிரியா ஓவியாவை அடித்ததால் அவரது வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |