தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களாக போர் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வடகொரியா கடந்த இரண்டு வாரங்களில் ஏழு முறை ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான நிலை அதிகரித்திருக்கிறது.
இந்த சூழலில் இந்த ஏவுகணைகள் சோதனை தென்கொரியா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கான ஒத்திகை என வடகொரியா எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஆளும் தொழிலாளர் கட்சியின் 77 வது வருட விழாவை முன்னிட்டு வடகொரிய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சோதிக்கப்பட்ட ஏவுகணைகளும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் மேற்பார்வையில் சோதிக்கப்பட்ட ஏவுகணைகளும் தென்கொரியாவின் ராணுவ தளங்கள் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை தாக்கும் திறனை வெற்றிகரமாக உறுதி செய்துள்ளது. மேலும் இந்த ஏவுகணைகள் சோதனை தென்கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு வெளிப்படையான எச்சரிக்கை இது எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் இலக்குகளை துல்லியமாக தாக்கி அளிக்க தயாராக இருக்கும். வடகொரியாவின் அணு ஆயுதப் படையின் திறனை முழுமையாக காட்டுகிறது என கூறப்பட்டிருக்கிறது.