அனைவரின் மனதும் ஆசைப்படும் ஒன்று திருமணம். அவற்றில் மணமகளின் தாலி மூன்று முடிச்சு போடுவதன் சாஸ்திரம் இதுவே..!
திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்வார்கள். திருமணத்தில் சடங்குகள், சம்பிரதாயங்கள் எத்தனையோ இருந்தாலும் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவது தான் ஐதீகம். அதை மாங்கல்ய தாரணம் என்று சொல்வார்கள்.
திருமணத்தில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள் அது ஏன் என்பதை பார்க்கலாம்.
மூன்று முடிச்சு இடுவது தான் தாலி கட்டுதல் என்று சொல்கிறோம். விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் இந்த மூன்று நிலைகளையும் இந்த முடிச்சுகள் குறிக்கின்றது. இந்த மூன்று நிலையிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வோடு இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் இந்த மூன்றிலும் தூய்மை மிக்கவளாக திகழ வேண்டும்.
குடும்ப பெரியவர்களிடம் மதிப்பு, கணவரிடம் அன்பு ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும் இப்படி மூன்று முடிச்சு இருக்கும். எத்தனையோ காரணங்கள் இருக்கின்றது. இறைவன், தேவர்கள் மற்றும் விண்ணவர்கள் சாட்சியாக போடப்படுகிறது முதல் முடிச்சு.
முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சு, பெற்றோர்கள், திருமணத்திற்கு வருகை தந்தவர்களின் சாட்சியாக போடப்படுவது மூன்றாவது முடிச்சு. அறம், பொருள், இன்பம் படி வாழ்க்கை நடத்துவோம் என்பதை குறிப்பதற்கும் மூன்றாவது முடிச்சு.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பெயரால் உறவை உறுதிப்படுத்துவது. கணவன், மூத்தோன், இறைவன் ஆகிய மூவரின் சொற்படி நடக்க இந்த மூன்று முடிச்சுகளும் போடப்படுகின்றது.
அம்பிகையின் மகிமையை போற்றும் லலிதா சகஸ்ர நாமத்தில், காமேஷ் ந்த மாங்கல்ய சூத்திரம் சோபித்த தந்திரா என அம்பிகையால் போற்றப்படுகிறார்கள். அதன் பொருள்: சிவபெருமானால் கட்டப்பட்ட திருமாங்கல்ய சரடு அலங்கரிக்கும் அழகான கழுத்தை உடைய பொருள், எத்தனையோ ஆயிரம், ஆயிரம் ஆபரணங்களை அணிந்து இருந்தாலும் அம்பிகைக்கு அழகு சேர்ப்பது மாங்கல்யம் சூடியிருக்கும் மஞ்சள் கயிறு தான்.
ஆதிசங்கரர் சௌந்தர்ய லகரி அம்பாளுடைய திருமகளே பெருமையை சொல்கிறார். எத்தனை நகை அணிந்தாலும் சம்பிரதாயத்தின் சின்னமான மஞ்சள் கயிற்றில் கட்டிக் கொள்வதை சிறப்பு என்பது அது உணர்த்துகிறது. திருமணத்தில் தாலி கட்டும்பொழுது மாங்கல்யம் தந்துநானே என்றும் சொல்லப்படுகிறது.
அந்த மந்திரத்தில் தந்து என்பது கயிறு என்று பொருள் கொடுக்கிறது. மஞ்சள் கயிற்றால் கட்டப் படும் தந்து என்று கூறுகிறார்கள். மஞ்சள் கயிற்றில் தாலி இருந்தால் தான் மங்களம் பிறக்கும்.வறுமையில் வாட கூடிய பெண்கள் கூட தங்க தாலியை அடகு வைத்து மஞ்சள் கயிற்றில் தாலி அணிந்து கொள்வார்கள்.
நவீன பெண்கள் மஞ்சள் கயிற்றில் தாலி அணியும் பொழுது அலர்ஜி ஏற்படுவதாக சொல்கிறார்கள்.ஆனால் அதற்கு தரமான மஞ்சள் நூலால் தாலி அணியும் பொழுது இந்த மாதிரி அலர்ஜி பிரச்சனைகள் வராது. பணக்காரர்கள் கூட கழுத்தில் மஞ்சள் நூலில் தான் தாலியை அணிகிறார்கள்.
கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும் மஞ்சள் நூலில் தாலியை அணிந்தால் தான் அதற்கான மகத்துவம் கிடைக்கும். இதை இறைவனும் விரும்புவார்கள். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்று முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
திருமண சடங்குகளில் மூன்று முடிச்சுகள் போடுவது எதற்காக என்பதும் மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுவதும் அறிந்திர்களா..?