Categories
தேசிய செய்திகள்

ரயிலில் வாங்கிய சமோசாவில் இருந்த பொருள்… என்ன தெரியுமா…? அதிர்ச்சியில் பயணி…!!!!!

ரயிலில் வாங்கிய சமோசாவில் மஞ்சள் காகிதம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை – லக்னோ ரயிலில் பயணம் மேற்கொண்ட நபர் ஒருவர் ரயிலில் வழங்கும் சமோசாவில் மஞ்சள் காகிதம் இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்திருக்கின்றார். இதில் அவர் கூறியதாவது ஐ ஆர் சி டி சி பேன்ட்டரி நபரிடம் இருந்து சமோசா ஒன்று வாங்கினேன். அந்த சமோசாவில் பாதி பகுதிகளை சாப்பிட்ட பிறகு தான் பார்த்தேன் அதில் பைபர் காகிதம் ஒன்று இருப்பதைக் கண்டு அச்சமடைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ஐ ஆர் சி டி சி கூறியதாவது, உணவில் காகிதம் இருப்பதை கண்டு வருத்தப்படுகிறோம். மேலும் இது போன்ற சிரமத்திற்கு உங்களை கொண்டு சென்றதற்கு மன்னிக்கவும் பி என் ஆர் மற்றும் மொபைல் எண்ணை தன் ட்விட்டர் பக்கத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ ஆர் சி டி சி ட்விட்டரில் கூறியுள்ளது இந்த நிலையில் தற்போது இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |