காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஏமாகவுண்டனூர் சேக்கன்துறை பகுதியில் தர்மேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வர்ஷினி(19) என்ற மகள் உள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக வர்ஷினிக்கு காரைக்குடியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த பெற்றோர் வர்ஷினியை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் ஆதார் கார்டு எடுத்து வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற வர்ஷினி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே வர்ஷினியின் தாய் ஜமுனாராணி தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.