தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க கூடிய வகையில் குற்ற தடுப்பு நடவடிக்கையாகவும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க டிஜேபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். இதற்கு ”ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்திற்குள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ள ரவுடிகளுக்கு குறி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இப்படியே சதித்திட்டம் தீட்டி செயல்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. அதே நேரத்தில் ரவுடிகளுக்கு அடைக்கலம் தரும் நபர்கள் மீது நடவடிக்கை பாயும். ரவுடிகள் ஏதேனும் தில்லாலங்கடி வேளையில் ஈடுபட்டால் தற்காப்பிற்காக துப்பாக்கிச் சூடு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஜிபி உத்தரவின்படி கோவை மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையிலான போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த இரண்டு நாட்களில் 88 ரவுடிகளின் மீது காவல்துறையின் நடவடிக்கை எடுத்தனர். 9 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். ரவுடிசத்தில் ஈடுபட்ட 62 ரவுடிகளின் நடவடிக்கை கட்டுப்படுத்த கூடிய வகையில் அவர்களின் மீது நன்னடத்தை பிணையும் பெறப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 17 ரவுடிகள் மீது பிடியாணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோவை மாவட்டத்தில் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்களின் மீதான மின்னல் வேட்டை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளனர். எனவே பொதுமக்கள் யாரும் பயப்ப்பட வேண்டாம் என்றும் காவல்துறை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இதனையடுத்து கோவை மாவட்டத்தில் இது போன்ற ரவுடிசம் செய்யும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். இதற்காக சிறப்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் நபர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.