Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் – வெளியானது முக்கிய தகவல் …!

இன்று மாலை அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

நாளை திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆனது நடைபெற இருக்கிறது. இந்த சட்டப்பேரவை கூட்டம் பொருத்தவரை நான்கு நாட்கள் நடைபெறும் என்றாலுமே இதில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்தும், இதில் பேசவேண்டிய முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்திலே பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழக அமைச்சரவை கூட்டமும் நேற்றைய தினம் நடந்து முடிந்திருக்கிறது. இதில்  அமைச்சர்களுக்கு முதலமைச்சர் என்னென்ன விஷயங்களுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் ? என்னென்ன விஷயங்களுக்கு எல்லாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவைத்து தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டின் உடைய பிரதான எதிர் கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவில் இருக்கக்கூடிய எம்எல்ஏக்கள் திமுக அரசின் மீது முன்வைக்கக்கூடிய குற்றச்சாட்டுகள், புகார்கள் போன்றவற்றையெல்லாம் எவ்வாறு எழுப்ப வேண்டும் என்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக திமுக அரசு அமைந்த பிறகு விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த பிரச்சனைகளுக்கு  யார் யார் பேசுவார்கள் ? என்னென்ன விஷயங்களை குறிப்பிட்டு பேசலாம் ? அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட விஷயங்கள், அதேபோல திமுக ஆட்சியின் ஒன்றரை ஆண்டு காலத்திலே எடுக்கப்பட்டு இருக்கக்கூடிய விஷயங்கள், மக்களை பாதித்த விஷயங்களை எல்லாம்  பட்டியல் போடுவது உள்ளிட்டவை சென்னையில் நடைபெறக்கூடிய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |