ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உக்ரைனால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் முன்னாள் அதிபராக கடந்த 2008 முதல் 2012-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் டிமிட்ரி மெத்வதேவ். தற்போது ரஷ்ய பாதுகாப்பு துறையின் துணை தலைவராக அவர் இருந்து வருகின்றார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில், உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தொகுத்து அளித்துள்ள தேடப்படும் நபர்களின் பட்டியல் ஒன்று வெளிவந்துள்ளது. இதில் ஒருவராக, மெத்வதேவ் இருக்கின்றார். உக்ரைன் நிலப்பரப்பின் ஒற்றுமையை வலுவிலுக்கவும் மற்றும் உக்ரைன் எல்லைகளில் அத்துமீறி நடந்து கொள்ளவும் முயற்சி செய்துள்ளார் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள பலர் இந்த பட்டியலில் உள்ளனர். அவர்களில் ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்கெய் ஷோய்கு, நாடாளுமன்ற கீழவை தலைவர் வியாசெஸ்லாவ் விளாடின், மேலவை தலைவர் வேலன்டினா மத்வியங்கோ மற்றும் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலய் பட்ருசேவ் ஆகியோரும் வைக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா மேற்கொண்டுள்ள படையெடுப்புக்கு பின்னர் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவரங்களை உக்ரைனிய அதிகாரிகள் ஏன் முன்பே வெளியிடாமல், தற்போது வெளியிட்டுள்ளனர் என்ற விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.