தென்கொரியாவில் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முகமூடிகளை வாங்க பல மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் வரிசையில் நிற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 2,592 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 77,150 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதேநேரம் கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகள் தங்கள் நாட்டுக்குள் மேலும் தொடர்ந்து பரவக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க பாதிக்கப்பட்ட நாட்டு மக்கள் அனைவரும் முகமூடி அணிந்து கொண்டு தான் பொது இடங்களுக்கு செல்கின்றனர்.
அந்த வகையில் தென்கொரியாவில் கொரானா வைரஸ் பாதிப்பு தற்போது அதிகரித்துள்ள நிலையில் முகமூடிகளை வாங்குவதற்காக பல மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் காட்சி வைரலாகியுள்ளது. அந்நாட்டின் டேகு (Daegu) நகரம், கொரானா வைரஸ் வேகமாக பரவி வரும் தீவிரத்தை கருத்தில் கொண்டு சிறப்பு பராமரிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்நகரத்தில் கொரோனா பாதுகாப்பு முகமூடி விற்பனை செய்யப்படும் இ-மார்ட் கடைக்கு வெளியில் நீண்ட தூரமாக வரிசையில் நின்று கொண்டு பொதுமக்கள் காத்திருக்கும் காட்சியை ட்ரோன் கேமரா படம் பிடித்துள்ளது. அந்த நகரில் 14,00,000 பாதுகாப்பு முகமூடிகளை இ-மார்ட் நிறுவனம் பாதி விலையில் விற்பனை செய்து வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
In the #SouthKorean city of #Daegu, hundreds of people have been pictured queuing to buy face masks #coronavirus 🧐😷☠️ pic.twitter.com/YS3zZeqLII
— THE HERETIC (@admit2sin) February 24, 2020