பொள்ளாச்சியை சேர்ந்த கால்நடை மருத்துவர் விஜயன் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கிறிஸ்துவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து 1993ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்தது எனவும், முறையான கணக்கெடுப்பு நடத்தப்படாமல் நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த உத்தரவு பிறவிக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தை பிற்படுத்தப்பட்ட நல ஆணையத்துக்கு அனுப்பி மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். அதனைத் தொடர்ந்து உரிய ஆதாரங்களுடன் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு முறையிட்ட போது புள்ளிவிவரங்கள் முழுமையாக இல்லை என்றும் 4 மாவட்டங்களில் உள்ள எட்டு ஊர்கள் குறித்த விவரங்கள் மட்டுமே மாதிரியாக வழங்கப்பட்டுள்ளது.
இதை உண்மை விவரங்களாக எடுத்துக் கொண்டு பரிந்துரைக்கும் முடியாது என்றும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்கப்படவில்லை. இந்து வன்னியரை விட கிறிஸ்தவ வன்னியர்கள் சமூக பொருளாதார அடிப்படையில் நல்ல நிலையில் இல்லை என்பதால் கிறிஸ்தவ வன்னியர்களின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க உதவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.