மீனம் ராசி அன்பர்களே, இன்று கடன் சுமை குறையும் நாளாகவே இருக்கும். காரிய வெற்றி ஏற்படும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல்கள் வந்து சேரும். இன்று மற்றவர்களுக்காக எந்தவித உத்திரவாதமும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.
சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலமும் ஏற்படும். பணவரவு ஓரளவு இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லையும் நீங்கும். நீண்டதூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். இன்று புதிய நபர்களின் வருகையும் அவர்கள் மூலம் உங்களுக்கு லாபமும் கிடைக்கும்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு முன்னேற்றமான சூழல்தான் நிலவுகிறது. மாணவர்களுக்கு எந்தவித தடையுமில்லாமல் கல்வியில் முன்னேறி செல்வார்கள். இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் கருநீல நிறம்