Categories
மாநில செய்திகள்

கோவை, சென்னை சிறப்பு : இரவிலும் பெண்கள் செல்லலாம் – முதல்வர்

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம் , இரவிலும் செல்லலாம் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளர்.

இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் , ஜெயலலிதா பிறந்தநாள் மாநில பெண்கள்  குழந்தை பாதுகாப்பு நாளாக அறிவிக்கப்பட்டு, இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இரவு நேரங்களில் பெண்கள் அச்சமின்றி பாதுகாப்பு செல்ல முடிகின்றது.

தமிழகத்தின் பெண்கள் பாதுகாப்பில் சிறந்த நகரமாக சென்னை மற்றும் கோவை திகழ்கிறது.சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதால் குற்றம் குறைந்துள்ளது.

Categories

Tech |