உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்திய மக்கள் அங்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொள்ளும் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தங்கள் குடி மக்களுக்கு இந்திய தூதரகம் அறிவுரை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இந்திய மக்கள் உக்ரைன் நாட்டிற்குள் தேவையின்றி பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
உள்ளூர் அதிகாரிகள் அளிக்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அங்கு வசிக்கும் இந்திய மக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். அங்கிருக்கும் இந்திய மக்கள், தங்களின் நிலை பற்றி இந்திய தூதரகத்திற்கு சரியான தகவலை தெரிவிக்க வேண்டும். அதன் மூலமாக தேவைப்படும் இடங்களில் தூதரக அதிகாரிகள் உங்களை எளிதில் அணுகுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.